தமிழக ரேஷன் கடைகளில் இலவச அரிசி, மலிவு விலையில் பருப்பு, சீனி, கோதுமை உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அரசு நிதி உதவிகளும் இதன் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பயன் அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் நியாய விலைக் கடைகளில் இலவசப் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களை பணம் செலுத்தி வாங்கக் கூடிய சோப்பு, தீப்பெட்டி, உப்பு போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி விற்பனை செய்ய கூடாது என்று கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், இந்த அறிவுறுத்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Categories