Categories
சினிமா தமிழ் சினிமா

‘இதை விட மிகச்சிறந்த பிறந்தநாள் பரிசு வேறு இல்லை’… கமல்ஹாசனை சந்தித்த ஆர்யா நெகிழ்ச்சி ட்வீட்…!!

நடிகர் ஆர்யா உலகநாயகன்  கமல்ஹாசனை சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை  டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் .

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நடிகர் ஆர்யா தற்போது ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் பா.ரஞ்சித் இயக்குகிறார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களால் கவரப்பட்டது. இந்த படத்திற்காக ஆர்யா தனது உடல் தோற்றத்தை மாற்றியிருப்பது அனைவரிடம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இதனால் ஆர்யா ரசிகர்களாலும் திரைபிரபலங்களாலும் பாராட்டப்பட்டார் .

இந்நிலையில் நடிகர் ஆர்யா தனது பிறந்த நாளுக்காக ஆசி வாங்குவதற்காக உலக நாயகன் கமல்ஹாசனை சந்தித்து அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் ‘இதைவிட மிகச்சிறந்த பிறந்தநாள் பரிசு வேறு எதுவும் இல்லை. ‘சார்பட்டா’ படத்தை பார்த்த கமல்ஹாசன் அவர்களிடம் பாராட்டு பெற்றது மிகப்பெரிய பாக்கியம் . இது தன் வாழ்வில் மிகச் சிறந்த நாள்’ என பதிவிட்டுள்ளார். கமல்ஹாசனை ஆர்யா சந்தித்த இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |