மூன்று மாதம் வரை வைத்து பயன்படுத்தும் விதமாக ஆவின் நிறுவனத்தின் புதிய பால் பாக்கெட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மூன்று மாதம் வரை வைத்து பயன்படுத்தும் விதமாக ஆவின் டிலைட் எனும் பசும்பாலை ஆவின் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கின்றது. அதாவது பொதுமக்கள் வேண்டுகோளுக்கு இணங்க புதிய வடிவத்தில் 500 மில்லி லிட்டர் பாக்கெட் களில் தயார் செய்யப்படுகிறது குளிர்சாதன பெட்டி வசதி இல்லாமல் 90 நாட்கள் வரை வைத்து பயன்படுத்தலாம் என கூறப்பட்டிருக்கிறது. மேலும் 500 மில்லி லிட்டர் பாக்கெட்டின் சில்லறை விலை 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் முன்பு இயற்கை பேரிடர் போன்ற காலங்களில் மக்களுக்கு பால் பவுடர் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது ஆவின் விலை பால்பாக்கெட் பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது மேலும் 500 மில்லி லிட்டர் ஆவின் டிலைட் பாலில் 3.5 சதவீதம் கொழுப்பு, 0 சதவீதம் பாக்டீரியா இருக்கிறது பயணம் செய்பவர்களுக்கு பயன்படும் விதமாக இது இருக்கிறது.