Categories
உலக செய்திகள்

இதோடு நிறுத்தாவிடில் கடும் விளைவுகள் ஏற்படும்…. ஈரானை எச்சரித்துள்ள பிரபல நாடுகள்..!!

அணுசக்தி ஒப்பந்தத்தை மீறி செயல்பட்டதாக அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் ஈரானை எச்சரித்துள்ளன. 

கடந்த 2015 ஆம் வருடத்தில் JCPOA என்ற அணுசக்தி கட்டுப்பாடு ஒப்பந்தத்தில் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளுடன் ஈரான் கையெழுத்திட்டிருந்தது. எனினும் ஈரான் அரசு கடந்த 2020 ஆம் வருடத்தில் டிசம்பர் மாதம் நாட்டினுடைய பொருளாதாரத்தை மீட்பதற்காக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை சுமார் 20% உற்பத்தி செய்வதற்கான முடிவை எடுத்துள்ளது.

இதனையடுத்து சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்ட சர்வதேச அணுசக்தி அமைப்பானது(JAEA), அணுசக்தி ஒப்பந்தத்தை மீறி ஈரான் உலோகத்தை உற்பத்தி செய்திருக்கிறது என்று உறுதிப்படுத்தியுள்ளது. இதனைத்தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஈரானின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் உற்பத்தி செய்வதை நிறுத்தாவிடில் ஈரான் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டிருப்பதை ரத்து செய்ய முடியாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் இந்த அணுசக்தி ஒப்பந்தத்தில்  இணைந்த பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளும் ஒன்றாக இணைந்து  அறிக்கை வெளியிட்டு ஈரானை எச்சரித்துள்ளன. இந்நாடுகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, “இந்த நடவடிக்கைகளை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் மேலும் எந்தவிதமான இணக்கமில்லாத நடவடிக்கைகளையும் அணுசக்தி திட்டத்தில் மேற்கொள்ள வேண்டாம்” என்று வலியுறுத்தியுள்ளனர். மேலும் இதுபோன்ற நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டிவரும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |