Categories
அரசியல்

இதோடு நிறுத்திக்கோங்க சீமான்…. இல்லேன்னா அவ்வளவுதான்…. ஜோதிமணி எச்சரிக்கை…!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அரசியல் தலைவர்கள் குறித்து அவதூறாக பேசி வருவதையடுத்து அவர் மீது வழக்குத் தொடர்ந்து கைது செய்யவேண்டும் என்று ஜோதிமணி எம்பி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகைமற்றும்  ஜோதிமணி எம்பி ஆகியோர் டிஜிபி சைலேந்திரபாபுவை சந்தித்து புகார் மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜோதிமணி, அரசியலானது இளைஞர்களை நல்ல வழிக்கு கொண்டு செல்லும் வகையில் இருக்க வேண்டும்.

ஆனால் சீமான் பயங்கரவாதத்தை ஆதரிப்பது போல பேசி வருகிறார். இதனால் இளைஞர்களின் வாழ்கை நாசமாகிவிடும். தமிழகத்தில் வன்முறையை தூண்டும் விதமாக பேசி வரும் சீமான் மீது சட்டவிரோத தடுப்பு நடவடிக்கை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் இறந்துபோன தலைவர்கள் குறித்து கொச்சைப்படுத்தி பேசுவது சரியானது கிடையாது என்று பேசிய காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் செல்வபெருந்தகை சீமான் இது போன்ற பேச்சுக்களை இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |