Categories
தேனி மாவட்ட செய்திகள்

இதோட இது கலந்ததுனால துர்நாற்றம் வீசுது…. பொதுமக்கள் கோரிக்கை…. தேனி மாவட்டம்….!!

தேனியில் பெய்த கனமழையால் சாலையில் மழையின் நீர் பெருக்கெடுத்து ஓடியுள்ளது.

தமிழகத்தில் தற்போது கோடை கால சூழ்நிலை நிலவுகிறது. இதனால் அனைத்து பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. அதேபோல் தேனி மாவட்டத்திலும் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதற்கிடையே கூடலூர் மற்றும் அதனுடைய சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பொழிவு ஏற்பட்டது.

இதனால் சாலைகளில் மழையின் நீர் பெருக்கெடுத்து ஓடியுள்ளது. மேலும் இந்த மழைப் பொழிவால் கூடலூரிலிருக்கும் மெயின் பஜாரில் மழை நீருடன் சேர்ந்து கழிவு நீரும் சாலையில் பெருக்கெடுத்து ஓடியுள்ளது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. அப்பகுதி மக்கள் கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்யும்படி நகராட்சி நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Categories

Tech |