Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இதோட தேவை அதிகமா இருக்கு..! ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும்… மாநில துணைத்தலைவர் பரபரப்பு பேட்டி..!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக வந்த பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வந்த பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை நிபுணர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, கொரோனா தொற்று அச்சுறுத்தல் நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அதிக அளவில் ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. இந்த ஆக்சிஜனை வெளிநாடுகள் மூலம் பெறுவதைவிட உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வது மிகவும் அவசியம்.

எனவே தற்போது நிலவிவரும் கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலயத்தை ஆக்ஸிஜன் உற்பத்திக்காக திறப்பது நல்லது. ஆனால் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று கூறுவது எந்த வகையிலும் ஏற்க முடியாத ஒன்றாக உள்ளது. மேலும் மாநில அரசே டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகமாவதற்கு காரணம் என்று கூறிய அவர் இதில் மத்திய அரசை குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை என்று கூறியுள்ளார்.

Categories

Tech |