Categories
உலக செய்திகள்

இதோட மாறுபாடு கவலைக்கிடமாக உள்ளது..! ரொம்ப கவனமா இருக்கணும்… பிரித்தானியா பிரதமர் எச்சரிக்கை..!!

பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியாவின் கொரோனா வைரஸ் மாறுபாடு குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இங்கிலாந்து பொது சுகாதாரம் முதன்முதலில் இந்தியாவில் அடையாளம் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று மாறுபாடு B.1.617.2 கவலைக்கிடமான ஒன்றாக உள்ளது என்று கூறியுள்ளது. இதுகுறித்து பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்த கருத்தில் கூறியதாவது, இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று மாறுபாடு குறித்து பிரித்தானியா மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் இந்த புதிய வகை மாறுபாடு தொற்றை கண்டறிய வீடு, வீடாக சென்று சோதனை நடத்தி வருகிறோம். அதோடு மட்டுமல்லாமல் அவர்களை தனிமைப்படுத்தியும் வருகிறோம்.

இதற்கிடையே மக்கள் மற்றும் போக்குவரத்து மீது பிரித்தானியா அரசு கடுமையான கட்டுப்பாடுகளும் விதித்துள்ளது என்று பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார். மேலும் பிரித்தானியாவின் சிவப்பு பட்டியலில் இந்தியா ஏற்கனவே உள்ளது. அதாவது இந்தியாவில் இருந்து இங்கிலாந்து பயணிப்பதற்கு முன் அவர்களுக்கு 10 நாட்கள் நாட்டிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்படும். அதில் ஐரிஷ் மற்றும் பிரிட்டிஷ், குடியிருப்பாளர்கள் மற்றும் குடிமக்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படும். ஆனால் அவர்களும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஹோட்டலில் பத்து நாட்கள் தங்கி இருக்க வேண்டும்.

Categories

Tech |