Categories
அரசியல் மாநில செய்திகள்

இதோட விட போறது இல்ல…! திரும்பவும் போராடுவோம்….! முக.ஸ்டாலின் உறுதி …!!

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக கூட்டணி நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் முக.ஸ்டாலின் பேசியது வருமாறு:

மத்தியில் ஆளும் பாஜக அரசு விவசாயிகளுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த மக்களுக்கும் விரோதமான அடிப்படையில் கொடுமையான மூன்று வேளாண் சட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளது. அந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டுமென்று வலியுறுத்தி டெல்லி தலைநகரில் மட்டுமல்லாது வடமாநிலங்களில் விவசாயிகள் ஒன்று திரண்டு மிகப்பெரிய போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். ஒரு நாள், இரண்டு நாள் இல்லை இன்றோடு 23 நாட்களாக தொடர்ந்து அந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

அந்த விவசாயப் பெருங்குடி மக்களுக்கு தமிழகத்தின் சார்பில் நாமும் நமது ஆதரவை தெரிவித்து விட வேண்டும் என்று முடிவு செய்து பல்வேறு போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்தாலும் இன்று நமது மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் உண்ணா நோன்பு என்னும் அறப் போராட்டத்தை அறிவித்து நாம் இன்று நடத்த உள்ளோம். கடந்த மார்ச் மாதம் கொரோனா தொற்று பரவத்தொடங்கியது.

மக்களுக்கு விரோதமான சட்டங்கள்:

இந்தியா முழுவதும் அந்தக் கொடிய நோயில் சிக்கி தவித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் அதைப்பற்றி மத்தியில் இருக்கக்கூடிய மற்றும் மாநில அரசு சிந்திக்காமல் மக்களைப் பற்றி கவலைப்படாமல், சுகாதார பணிகளையும் பொருளாதார உதவிகளையும் எந்த நிலையில் மேற்கொள்ள வேண்டும் என்பதை ஆராயாமல் பாஜக ஆட்சியும் மாநிலத்தில் இருக்கும் அதிமுக ஆட்சியும் தங்கள் போக்கில் மக்களுக்கு விரோதமான எண்ணங்களை சட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றனர்.

அதில் குறிப்பாக கொரோனா காலத்தைப் பயன்படுத்தி மத்தியில் இருக்கும் பாஜக அரசு மக்கள் விரோத சட்டங்களை அவசரஅவசரமாக கொண்டுவந்து  நிறைவேற்றிக் கொண்டிருக்கும் நிலையையும் நாம் பார்க்கிறோம். அதில் குறிப்பிட்டு கூற வேண்டுமென்றால் 3 வேளாண் சட்டங்கள், அதே போன்று தொழிலாளர் சட்ட தொகுப்புகள், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவறிக்கை, புதிய மின்சார திருத்த சட்டம். இந்த நான்குமே மக்களுக்கு விரோதமான சட்டங்கள் என்பதை நான் கூறவேண்டிய அவசியமில்லை.

கொதித்துப் போன டெல்லி:

மக்களைப் பற்றி கவலைப்படாமல் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தொழில் நடக்கும் வகையில் அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு சலுகைகளை மத்திய அரசு கண்மூடித்தனமாக வழங்கிக் கொண்டிருக்கிறது. இந்த மூன்று சட்டங்களுக்கு எதிராக இந்தியாவே இன்று கொந்தளித்துப் போயுள்ளது. குறிப்பாக இந்தியாவின் தலைநகரான டெல்லி கொதித்துப் போயுள்ளது.

வட மாநிலத்தில் இருக்கும் விவசாயிகள் கூட்டம் கூட்டமாக டெல்லி மாநகரை நோக்கி வருகை தந்து அங்கேயே தங்கி கடுமையான குளிரையும் பொருட்படுத்தாமல் அந்த இடத்திலேயே உறங்கி, சமைத்து உணர்வுபூர்வமான போராட்டத்தை விவசாயப் பெருங்குடி மக்கள் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

மத்திய அரசின் நாடகம்:

இந்த மூன்று வேளாண் சட்டங்களும் விவசாயத்தை பாதிக்கக் கூடிய சூழலிலும் விவசாயிகளின் வாழ்க்கையை சிதைக்கும் நிலையிலும் அமைந்துள்ள காரணத்தால் ஒட்டுமொத்த விவசாயிகளும் அதை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த சட்டங்களை கொண்டு வருவதற்கு முன்பு விவசாயிகளை அழைத்து பேசி இருக்க வேண்டும். விவசாய சங்கத்தில் இருக்கும் பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி இருக்க வேண்டும். அல்லது பாராளுமன்றத்தில் நாடாளுமன்றத்திலும் இது குறித்த நீண்ட விவாதத்தை நடத்தி முறையாக ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும்.

ஆனால் இது எதையும் மத்திய அரசு செய்திடவில்லை. எதற்காக இந்த அவசரம்? யாரைப் பாதுகாக்க இந்த சட்டத்தை அவர்கள் கொண்டு வந்துள்ளனர். இதை மக்கள் மன்றத்திற்கு தெளிவுபடுத்த வேண்டும் அதை செய்யாமல் மத்திய அரசு இன்று பேச்சுவார்த்தை என்ற பெயரில் ஒரு நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். விவசாயிகளின் கோரிக்கை ஒன்றே ஒன்றுதான். இந்த மூன்று வேளாண் சட்டங்களை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

தேசிய விரோதிகள், அந்நியக் கைக்கூலிகள்:

அவர்களது வாழ்க்கையை காப்பாற்றிக்கொள்ள போராடிக்கொண்டிருக்கிறார்கள் நாம் தொடர்ந்து ஊடகங்களில் வரும் காட்சிகளை பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் மத்திய அரசு அதனை அலட்சியப்படுத்தி கொண்டிருக்கிறது. அதனை கண்டிக்கும் வகையில் தான் நாம் போராட்டத்தை நடத்துகிறோம். அதுமட்டுமில்லாமல் போராடுபவர்களை மத்திய அரசு என்ன சொல்கிறது என்றால் தேசிய விரோதிகள் என்றும் அந்நியக் கைக்கூலிகள் என்றும் கூறுகிறார்கள். எனவே இப்படி முத்திரை குத்தி கொச்சைப்படுத்த கூடிய நிலையை தான் நாம் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் மூலமாக கண்டிக்கின்றோம்.

வேளாண் சட்டத்திருத்தம் கொண்டு வருகிற காரணத்தினால் எந்த  பயனும் இல்லை. அதனை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அதுதான் விவசாயிகள் உட்பட பலரின் கோரிக்கை என்பதை எடுத்துக்கூறி அதை திரும்பப் பெறும் வரை நமது போராட்டம் தொடரும். பல்வேறு கட்டங்களில் அதை முடிவு செய்து அறிவித்து நடத்த திட்டமிட்டுள்ளோம். எனவே இன்று உண்ணாவிரத போராட்டத்தில் பங்கெடுத்து தமது உணர்வுகளை வெளிப்படுத்த வருகை தந்திருக்கும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் அனைவரையும் நான் இன்முகத்தோடு வரவேற்க கடமைப்பட்டுள்ளேன்.

2 நிமிட அஞ்சலி:

அதே போன்று நம்முடைய கூட்டணிக் கட்சியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் அத்தனை பெயரையும் வரவேற்க கடமைப்பட்டுள்ளேன். அதே போன்று  போராட்டத்தில் பங்குபெற்று இருப்பவர்களையும் இன்முகத்தோடு வரவேற்று, அதே நேரத்தில் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் விவசாய பெருங்குடி மக்களை சார்ந்திருக்கும் நமது தோழர்கள் நேற்று வரை 21 பேர் அதிர்ச்சியினால் உம் தற்கொலை நாளும் உயிரை விட்டுள்ளனர்.

அவர்களுக்கெல்லாம் இந்திய அளவில் இருக்கக்கூடிய விவசாய அமைப்பை சார்ந்த இருக்கக்கூடியவர்கள் வரும் 20ஆம் தேதி அஞ்சலி செலுத்துவதாக முடிவு செய்து செய்தி வெளியிட்டுள்ளனர். இன்று 18ஆம் தேதி இந்த போராட்டத்தை நாம் நடத்துகின்ற காரணத்தினால் நாமும் அதில் பங்கேற்க வேண்டும். எனவே அதற்கு முன்கூட்டியே இங்கு வந்திருக்கும் அனைவரும் அமைதியாக எழுந்து நின்று 2 நிமிடம் மறைந்த 21 பேருக்கு நமது அஞ்சலியை செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

Categories

Tech |