நாகையில் நடைபெற்ற கட்டிட பொறியாளர்கள் சங்கக் கூட்டத்தில் கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
கட்டிட பொறியாளர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நாகையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டம் சங்க தலைவர் செல்வகுமார் தலைமையில் நடைபெற்றது. மேலும் பொருளாளர் ரகுமான், செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. மாநில தலைவர் சரவணன் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. தமிழக அரசை மாநில அளவில் என்ஜினீயர்ஸ் கவுன்சிலிங் அமைக்க வலியுறுத்துவது.
கட்டுமான பொருட்களின் விலையை கட்டுப்படுத்த வேண்டும். அனைத்து கட்டுமான பணிகளும் அங்கீகரிக்கப்பட்ட சிவில் என்ஜினீயர்ஸ் மேற்பார்வையில் நடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 2022-23 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் முன்னதாக தேர்வு செய்யப்பட்டனர். இந்த கூட்டத்தில் முன்னாள் தலைவர் சிங்காரவேலு முடிவில் நன்றி கூறினார்.