தேனியில் கலெக்டர் அலுவலகம் முன்பாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்டத்தில் அமைந்திருக்கும் கலெக்டர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் உரத்தின் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்தும், அதனை குறைக்கும் படியும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு மாவட்ட செயலாளரான காசிவிஸ்வநாதன் அவர்கள் தலைமை தாங்கியுள்ளார்.
மேலும் இதில் பல நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இதில் விவசாயிகள் பூச்சிக்கொல்லி பாட்டில்களை தோரணத்தில் கட்டி போராட்டத்தில் பங்கேற்றனர். இப்போராட்டத்தில் விவசாயிகள், உரத்தின் விலை உயர்வுக்கு எதிராகவும், மத்திய மத்திய அரசாங்கத்தை கண்டனம் செய்யும் விதமாகவும் கோஷங்கள் எழுப்பியுள்ளார்கள்.