மாட்டு வண்டியை எதிர்கால டெஸ்லா என கூறி அதனை ட்விட்டரில் பதிவிட்டு அதோடுகூட எலான் மஸ்க்கின் புகைப்படத்தையும் டேக் செய்து தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா வெளியிட்டுள்ள பதிவு தற்போது வைரலாக பரவி வருகிறது. அவருடைய டுவிட்டர் பதிவில் இரண்டு மாடுகள் பூட்டப்பட்ட வண்டியில் சிலர் படுத்து உறங்குவது போன்ற படத்தை வெளியிட்டு முற்றிலும் தானாக இயங்கக்கூடிய இந்தியாவின் எதிர்கால டெஸ்லா என பதிவிட்டுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் இந்த வண்டியை இயக்குவதற்கு கூகுள் மேப் தேவை இல்லை, எரிபொருள் வாங்க வேண்டிய அவசியம் இல்லை, வேலை செய்யும் இடத்தில் இருந்து வீட்டிற்கு தானாக வந்துவிடும் என பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த இணையத்தள வாசிகள் பலரும் தங்களது சிறிய வயது ஞாபகங்களை பகிர்ந்துள்ளனர்.