இயக்குனர் செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் படம் ரீ – ரிலீஸ் ஆவது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’. இந்த படத்தில் ரீமாசென் ,ஆன்ட்ரியா ,பார்த்திபன் ஆகியோர் நடித்திருந்தனர் . இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார் . 12ஆம் நூற்றாண்டின் சோழப் பின்னணியைக் கொண்டு தமிழில் எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது . இந்நிலையில் ஆயிரத்தில் ஒருவன் படத்தை தற்போது ரீ ரிலீஸ் செய்ய உள்ளனர் . நாளை இந்த படம் தமிழகத்தில் 40க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது .
உங்கள் ஆதரவுக்கு என்றும் கடமைப் பட்டிருக்கிறேன். இதோ ! மீண்டும் ஆயிரத்தில் ஒருவன். !
31 st. December 2020 முதல்.“ சோழன் பயணம் தொடரும் “ pic.twitter.com/iGsrgZmGvi
— selvaraghavan (@selvaraghavan) December 30, 2020
இதுகுறித்து இயக்குனர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘உங்கள் ஆதரவுக்கு என்றும் கடமைப்பட்டிருக்கிறேன் . இதோ! மீண்டும் ஆயிரத்தில் ஒருவன் ! 31 டிசம்பர் 2020 முதல். ‘சோழன் பயணம் தொடரும்’ ‘என பதிவிட்டுள்ளார் . இதேபோல் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான புதுப்பேட்டை படமும் நாளை ரிலீஸ் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது