ஆப்கானிஸ்தானின் தலைநகரில் கடந்தாண்டு ஐ.எஸ் தீவிரவாத அமைப்புகள் நடத்திய தாக்குதலுக்கு தங்கள் நாட்டின் உளவுத்துறை கொடுத்த பதிலடி தொடர்பான வீடியோவை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரிலுள்ள விமான நிலையத்தில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர்கள் கடந்தாண்டு அதிபயங்கர தாக்குதலை நடத்தியுள்ளார்கள்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்காவின் உளவுத்துறை ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் சிக்கி 7 குழந்தைகள் உட்பட அப்பாவி பொதுமக்கள் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். இதுதொடர்பாக நடந்த விசாரணையில் அமெரிக்கா ட்ரோன் தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்களை விடுதலை செய்துள்ளது.
இதனையடுத்து தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் அமெரிக்க உளவுத்துறை நடத்திய ட்ரோன் தாக்குதலின் மீது டைம்ஸ் செய்தி நிறுவனம் வழக்கு ஒன்றை போட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்கா, அந்நாட்டின் உளவுத் துறை நடத்திய ட்ரோன் தாக்குதல் தொடர்புடைய புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.