தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் மேலாண்மை குழு கூட்டம் மற்றும் பெற்றோர் கழகக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. இந்த கூட்டம் அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் முன்னிலையில் நடைபெறவிருக்கிறது. இந்த கூட்டம் வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணிவரை நடைபெறும். இந்தக் கூட்டத்தில் பெற்றோர்களுக்கு பள்ளி மேலாண்மை குழு அமைப்பு, அதன் செயல்பாடுகள், மேலாண்மை குழுவின் முக்கியத்துவம், அதில் பெற்றோர்களின் பங்கு ஆகியவை குறித்து விளக்கப்பட இருக்கிறது.
இந்த மேலாண்மை குழு வளர்ச்சியில் அரசு தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த மேலாண்மை குழு கூட்டத்திற்காக வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகின்றனர். இதன் காரணமாக இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.