Categories
உலக செய்திகள்

இத்தனை குழந்தைகளா…. பெரும் போரால்… நீடிக்கும் பதற்றம்….!!

ரஷ்யா தொடுத்துள்ள போரில் இதுவரை 198 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன்  சுகாதார மந்திரி தெரிவித்துள்ளார்.

நோட்டா அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து. உக்ரைன் நாட்டின் எல்லையில் லட்சக்கணக்கான படை வீரர்கள் மற்றும் போர் தளவாடங்களை குறித்து வந்துள்ளது. போரை தடுக்க ரஷ்யாவிடம் ஐ.நா அமைப்பு வேண்டுகோள் வைத்தது. இதற்கிடையில் தொடர்ந்து உக்ரைன் மீது இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு படைகளுக்கு விளாடிமிர் புதிர்  உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து உக்ரைனை பலமுனைகளில் இருந்து ரஷ்ய படைகள் தாக்க தொடங்கியுள்ளார். கடந்த 24 ஆம் தேதி 200க்கும் மேற்பட்ட தாக்குதல் நடத்தியுள்ளது.

முதல் நாள் போரில் 137 பேர் உயிரிழந்துள்ளனர் என உக்ரைன் அதிபர் கூறியுள்ளார். நேற்று முன்தினம் இரண்டாவது நாளாகவும் போர் நீடித்தது. இந்நிலையில் 3-வது நாளான நேற்று உக்ரைனின் 211 ராணுவ  நிலைகளை இலக்காகக் கொண்டு அழித்துள்ளது. ராணுவ தாக்குதலில் 1000 பேர் உயிரிழந்துள்ளனர் என உக்ரேன் ராணுவம் அறிவித்துள்ளது. ரஷ்ய  படையெடுப்பினால் 137 வீரர்களை இழந்துள்ளோம் என உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார். ஆனால் ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு பற்றி ராணுவம் எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் உக்ரைன் சுகாதார மந்திரி விக்டர் லையாஷ்கோ  பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அதில் மூன்று நாட்களாக தொடர்ந்து நடந்து வரும் போரில்1,115 உக்ரைனியர்கள்  காயமடைந்துள்ளனர். அவர்களில் மொத்தம் 33 குழந்தைகள் உட்பட 190 பேரை இதுவரை இறந்துள்ளதாக  தெரிவித்துள்ளார்.

Categories

Tech |