Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இத்தனை சுவையா? குழந்தைகள் விரும்பிடும் கற்கண்டு பொங்கல்….

இனிப்பு என்றால் பிடிக்காதவர் உண்டா? நிச்சயம் வாய்ப்பு இல்லை. அதிலும் குழந்தைகளை கேற்கவெய் வேண்டாம் இனிப்பாக கொடுத்தால் அதிகமே கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அதற்காகவே இந்த சுவையான ரெசிபி

இனிப்பு சுவை  நிறைந்த கற்கண்டு பொங்கல் செய்வது பற்றி பார்க்கலாம்…

தேவையானவை:

 

பச்சரிசி                     –             2 கப்

நெய்                           –             8 ஸ்பூன்

கற்கண்டு                 –             2 கப்

முந்திரி                     –             10

கிஸ்மிஸ்                –             10

பால்                            –            6 கப்

 

செய்முறை

அரிசியை  ஊற வைத்துவிட்டு கற்கண்டை  நன்றாக பொடி செய்து கொள்ளவும். பின்னர் குக்கரில் பாலுடன்  ஒரு தம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து ஊற வைத்துள்ள அரிசியை சேர்க்கவும். அதில் சிறிது உப்பு சேர்த்து அதனை  மூடி விடவும். மூன்று விசில் வரும் வரை காத்திருந்து அதன்பின்னர் பொடித்த கல்கண்டை கலந்து சில  நிமிடங்கள் காத்திருக்கவும்.

இன்னொரு பாத்திரத்தில்  நெய் ஊற்றி அதில் முந்திரி மற்றும் கிஸ்மிஸ் பழத்தை போட்டு நிறம் மாறும் வரை வறுத்து குக்கரில் உள்ள சாதத்துடன் சேர்க்கவும். சுவையான மற்றும் அருமையான கற்கண்டு பொங்கல் தயார்.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |