கொரோனா பேரிடர் விசா கெடுபிடிகள் போன்றவற்றால் சீனாவில் பாதியில் படிப்பை விட்டு விட்டு இந்தியா திரும்பிய மாணவர்கள் மீண்டும் சீனா சென்று படிப்பை தொடங்குவதற்கான விவரங்கள் மற்றும் தகவல்களை சீன தூதரகம் வெளியிட இருப்பதாக இந்தியாவிற்கான சீன தூதர் சன் வெய்டாங் அறிவித்திருக்கிறார்.
இந்திய மாணவர்களின் முதல் பிரிவினர் வெகு விரைவில் சீனியாவிற்கு சென்று கல்வியை தொடர்வார்கள் எனவும் அதற்கான பணிகளை இரு நாடுகளும் மேற்கொண்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இது பற்றி இந்தியாவில் உள்ள சீன தூதரக செய்தி தொடர்பாளர் பேசும்போது இத்தனை நாட்கள் அமைதியாக காத்திருந்தமைக்கு இந்திய மாணவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.