மதுரை மாவட்டத்தில் பறக்கும் படையினர் பரிசுப் பொருட்களை பதுக்கி வைத்திருந்த குடோனிற்கு சீல் வைத்ததால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது . இதனால் தேர்தல் குழு தேர்தல் விதிமுறைகளை அமலுக்கு கொண்டு வந்தது . மேலும் வாக்கு பெறுவதற்காக மக்களுக்கு பணமோ அல்லது பொருள்களோ அளிக்கப்படாமலிருக்க தேர்தல் குழு ஆங்காங்கே பறக்கும் படையினரை நியமித்துள்ளனர் . அந்த வகையில் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள ஒரு குடோனில் மக்களுக்கு வழங்குவதற்காக பரிசுப் பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக தேர்தல் குழு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இத்தகவலின் பேரில் குடோனிற்கு பறக்கும் படை அதிகாரி சசிகலா மற்றும் அவ்வூரின் துணை போலீஸ் சூப்பிரண்ட் வினோதினி சென்றுள்ளார்கள். இதனைத் தொடர்ந்து குடோனில் நடத்திய ஆய்வில் சுமார் 100க்கும் மேற்பட்ட கணினி, வாளி போன்ற பொருட்கள் இருப்பது தெரியவந்ததால் அதிகாரிகள் குடோனிற்கு சீல் வைத்தனர் . இச்சம்பவத்தை அறிந்த அதிமுக மற்றும் திமுக உறுப்பினர்கள் அங்கு கூடியதால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.