Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இத்தனை மாணவர்களா….? விதிமுறையை மீறிய ஆட்டோக்கள்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

விதிமுறையை மீறி அதிகமாக மாணவர்களை ஏற்றி சென்ற 11 ஆட்டோக்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னை மாவட்டத்தில் தனியார் பள்ளியில் படித்த 2-ஆம் வகுப்பு மாணவன் பள்ளி வாகனம் மோதி உயிரிழந்துவிட்டான். இதனை தொடர்ந்து பள்ளி வாகனங்களில் சிறப்பு ஆய்வு நடத்த அதிரடியாக உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அதிகாரி முருகானந்தம் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கோவை ரோடு, மெயின் ரோடு, பல்லடம் ரோடு, உடுமலை ரோடு உள்ளிட்ட முக்கிய சாலைகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தகுதி சான்று இல்லாமல், டிரைவர் சீருடை அணியாமல், போக்குவரத்து விதிமுறைகளை மீறி அதிகமான மாணவர்களை ஏற்றி சென்ற ஆட்டோக்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

இது குறித்து வட்டார போக்குவரத்து அதிகாரி முருகானந்தம் கூறியதாவது, பொள்ளாச்சியில் சிறப்பு வாகன தணிக்கை நடைபெற்றது. இதில் விதிமுறையை மீறிய 6 பள்ளி வாகனங்களுக்கு சோதனை அறிக்கை அளிக்கப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அதிகமான குழந்தைகளை ஏற்றிச் சென்ற 11 ஆட்டோக்களை பறிமுதல் செய்துள்ளோம். இதேபோன்று கிணத்துக்கடவு, ஆனைமலை, பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டு விதிமுறை மீறும் வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

Categories

Tech |