Categories
உலக செய்திகள்

இத்தாலியை முடக்கிப்போட்ட கொரோனா… உயிருக்கு போராடி வரும் நிலையில் மக்கள்..!!

சீனாவுக்கு வெளியே இத்தாலி நாட்டில் தான் உயிர்க்கொல்லி வைரஸ் தன்னுடைய கோரத்தாண்டவத்தை தொடர்ந்து வருகிறது.

அங்கு வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் ஒரே நாளில் 349 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இதனால் இத்தாலியில் வைரஸ் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை மளமளவென அதிகரித்து 2100 கடந்துவிட்டது. இத்தாலியில் புதிதாக 3833 பேர் வைரசுக்கு இலக்காக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 28,000 ஆக அதிகரித்திருக்கிறது.

அதில் 2000 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பீதி உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில், வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கான நிதியை இத்தாலி அரசு பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. கொரோனா காட்டுத்தீயாய் பரவி வருவதால், மருத்துவமனைகளின் எண்ணிக்கையில் இத்தாலி அரசு அதிகரித்து வருகிறது.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே முக கவசங்களை கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்று  வருவோரை இத்தாலிய காவல்துறையினர் தேடிப்பிடித்து கைது செய்து வருகின்றனர்.

Categories

Tech |