Categories
தேசிய செய்திகள்

இத்தாலி நிறுவனம் மீதான தடையை நீக்கியது ஏன்?….. காரணம் கேட்ட காங்கிரஸ்….!!

கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது முக்கிய பிரமுகர்களுக்கு ஹெலிகாப்டர்கள் வாங்க இத்தாலியை சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் ரூ.3546 கோடி மதிப்பில் ஹெலிகாப்டர் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் அதற்கு லஞ்சம் வாங்கி உள்ளதாக தகவல் வெளியானதால் இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. அதன் பிறகு அந்த நிறுவனம் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டது. இந்நிலையில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தனது டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார்.

அதில் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தின் தாய் நிறுவனமான பின்மெக்கானிக்காவை ஊழல் நிறுவனம் என்று மோடியும், போலி நிறுவனம் என்றும் அமித்ஷாவும் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கூறியிருந்தனர். அந்த நிறுவனத்தின் கருப்புப் பெட்டியில் இருந்து  2014 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டது. ஆனால் பிரதமர் மோடி தற்போது அந்த நிறுவனத்தின் மீதான தடையை  நீக்கியுள்ளது. இதில் என்ன ரகசியம் பேரம் நடந்தது? என்றும், நீங்கள் ஊழல் குற்றச்சாட்டு சுமத்திய நிறுவனத்துடன் இப்போது உடன்பாடு செய்தால் தவறில்லையா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Categories

Tech |