கன்னியாகுமரியை சேர்ந்த மறைசாட்சி தேவசகாயத்திற்கு புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கப்பட்டு கோலாகலமாக நிறைவு பெற்றது.
இத்தாலி நாட்டில் வாடிகன் என்ற நகரில் ரோம் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் கத்தோலிக்க திருச்சபையில் வைத்து கோலாகலமாக புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியானது காலை 10 மணிக்கு அதாவது இந்திய நேரப்படி மதியம் 1.30 மணி அளவில் தொடங்கியது. இந்த பட்டத்தை போப் பிரான்சிஸ் வழங்கியுள்ளார். கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கன்னியாகுமரியை சேர்ந்த மறைசாட்சி தேவசகாயம் புனிதராக போப்பாண்டவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டார்.
புனிதர் பட்டம் பெற்ற மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை, தமிழ்நாட்டின் முதல் புனிதர் ஆவார். இதனைத் தொடர்ந்து புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இக்காட்சிகளை கண்ட தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது, “இத்தாலியில் எதிரொலித்த தமிழின் பெருமை. 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்நாட்டை சேர்ந்த தேவசகாயம் பிள்ளை அவர்களுக்கு புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடி தமிழைப் பெருமை படுத்தியுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் செஞ்சி மஸ்தான், சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் போன்றவர்கள் தமிழகத்தின் பிரதிநிதிகளாக பங்கேற்றுள்ளனர். மேலும் ஜூன் மாதம் 5ம் தேதி மறைசாட்சி தேவசகாயம் கொல்லப்பட்ட இடமான ஆரல்வாய்மொழியின் காற்றாடி மலையில் பெருவிழா நடைபெற உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.