Categories
தேனி மாவட்ட செய்திகள்

இத இந்த முறையில பழுக்க வைக்கிறாங்க…. உடல்நல பாதிப்பால் பொதுமக்கள் அவதி…. உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை….!!

தேனியில் செயற்கை முறையில் மாம்பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்வதால் பொதுமக்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்படுகிறது.

தேனியிலிருக்கும் போடி, பெரியகுளம், கூடலூர் உட்பட பல பகுதிகளில் சுமார் 30,000 த்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் மாம்பழங்களை சாகுபடி செய்கின்றனர். இதனையடுத்து மாம்பழம் சீசனான ஏப்ரல் மாதம் வழக்கம்போல் தற்போதும் ஆரம்பித்திருக்கிறது. இதனால் மாம்பழம் 1 கிலோ 60 ரூபாய் முதல் 80 ரூபாய் வரையாக விற்பனையாகிறது. இந்த நிலையில் தற்போது விவசாயிகள் விற்பனை செய்யும் மாம்பழங்கள் சுவை குறைந்தும், மணமில்லாமலும் இருக்கிறது.

மேலும் இதனை சாப்பிடும் பொது மக்களுக்கு உடல்நல குறைவு ஏற்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது இந்த மாம்பழங்கள் செயற்கை முறையாக பழுக்க வைக்கப்படுவதால் இவ்வாறு உடல்நலக் குறைவை ஏற்படுத்துகிறது. இதனால் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |