நெல்லையில் முக கவசமின்றி வெளியே வந்த நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சீனாவிலிருந்து பரவிய கொரோனா சுகாதார பேரழிவினை உண்டாக்கியது. இதனால் அரசாங்கம் அதனை தடுக்க பல முயற்சிகளை மேற்கொண்டது. இதில் மெல்ல மெல்ல குறையத் தொடங்கிய தொற்று தற்போது மீண்டும் படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனால் அரசாங்கம் சில கட்டுப்பாடுகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொண்டது.
மேலும் கொரோனா தொற்றின் பரவலை தடுக்கும் விதமாக பொதுமக்கள் வெளியே வரும்போது முகக் கவசம் அணியவும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவும் வலியுறுத்தியது. இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டம் உவரியில் காவல்துறையினர் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு முகக் கவசம் அணியாத 31 நபர்களுக்கு 200 ரூபாய் வீதம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.