நெல்லை அருகே பொதுமக்களுக்கு கொரோனா தொற்றை முன்னிட்டு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
கடந்தாண்டு தமிழகத்தில் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா தொற்று அனைத்துப் பகுதிகளிலும் பரவி சுகாதார பேரழிவினை உண்டாக்கியது. இத்தொற்றினை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டதோடு மட்டுமல்லாமல் தொற்று குறித்த விழிப்புணர்வையும் பொதுமக்களுக்கு ஏற்படுத்தியது. இதனால் மெல்ல மெல்ல குறையத் தொடங்கிய கொரோனா தற்போது மீண்டும் தலைதூக்க ஆரம்பித்திருக்கிறது.
இதனால் அரசாங்கமும் சில தன்னார்வலர்களும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீரை வழங்கி வருகிறார்கள். அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் சில தன்னார்வலர்கள் பொதுமக்களுக்கு கபசுர குடிநீரை வழங்கியுள்ளார்கள். இந்நிகழ்ச்சியில் இருதய பள்ளியின் தாளாளரும், பணகுடியின் காவல்துறை சப் இன்ஸ்பெக்டரும் கலந்துகொண்டு முகக் கவசம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தினர்.