Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இத செஞ்சிங்கனா அதுல எவ்ளோ சத்து இருக்குனு தெரிஞ்சிகிடலாம்…. கல்லூரி மாணவர்கள்…. மதுரை மாவட்ட விவசாயி….!!

மதுரை வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் விவசாயிக்கு செயல்முறை விளக்கத்தை செய்து காண்பித்தனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கிருஷ்ணா வேளாண்மை கல்லூரி அமைந்துள்ளது. இக்கல்லூரியில் பயிலும் மாணவர்கள் கிராமப்புற தங்கல் திட்டம் அடிப்படையில், அதே பகுதியில் விவசாய நிலம் வைத்திருக்கும் சுரேஷ் என்ற விவசாயிடம் மண்ணை பரிசோதனை செய்ய மண் மாதிரிகள் எடுக்கின்ற முறையைக் குறித்து விளக்கம் அளித்துள்ளார்கள்.

மேலும் இதனுடைய பயன்கள் குறித்தும் கூறியுள்ளனர். அதாவது மண்ணை பரிசோதனை செய்தால் அதிலிருக்கும் சத்துக்களின் அளவை கண்டறியலாம் என்றுள்ளனர். மேலும் அச்சத்துக்களின் அடிப்படையில் பயிர்களை தேர்வு செய்து சாகுபடி செய்யலாம் என்றனர். இதற்கிடையே மாணவர்கள் விவசாயிடம் செயல்முறையை செய்து காண்பித்தனர்.

Categories

Tech |