Categories
அரசியல் மாநில செய்திகள்

இத சொல்ல அண்ணாமலைக்கு எந்த தகுதியும் இல்ல… இறங்கி அடித்த தமிழக அமைச்சர்…!!!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு திமுகவை குறை கூற எந்த தகுதியும் இல்லை என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நாகர்கோவிலில் புதிய அலுவலகம் ஒன்றை திறந்தார். அந்த அலுவலகத்தை கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஜய் வசந்த் திறந்துவைத்தார். இதைத்தொடர்ந்து மனோ தங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “குமரிமாவட்டத்தில் ஒக்கி புயல் ஏற்பட்டபோது பிரதமர் மோடி பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக வந்தார். அப்போது நேரடியாக கன்னியாகுமரியில் உள்ள விருந்தினர் மாளிகைகளை மட்டும் பார்வையிட்டு விட்டு சென்று விட்டார். இந்த நிலையில் அவரது கட்சியை சேர்ந்த அண்ணாமலை தமிழக வெள்ள சேதங்களை ஊர் ஊராகச் சென்று எல்லா பகுதிகளிலும் பார்வையிட்டு வரும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை பற்றி கூறுவதற்கு எந்த தகுதியும் கிடையாது.

மழை தொடர்பான இழப்பீடு தொகை குறைவாக உள்ளது என்று அவர் கூறுகிறார். பாஜக உண்மை நிலையை ஏற்க மறுக்கின்றது. இழப்பீட்டு தொகையை மாநில அரசு மட்டும் நிர்ணயிக்காது. மத்திய அரசுதான் நிர்ணயம் செய்யும். இழப்பீட்டு தொகை உயர்த்துவது தொடர்பாக திமுக அரசு தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும். அமைச்சரவை கூட்டத்திற்கு முன்பு முழுமையான சேத மதிப்பீடு குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வாய்ப்பு உள்ளது. மதிப்பீடு உள்ளிட்ட பணிகளுக்காக வெளிமாவட்டங்களில் இருந்து அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு அதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. ஏற்கனவே பெய்து முடிந்த மழையின் போது ஏற்பட்ட பாதிப்புகளை தமிழக அரசு சிறப்பாக சரி செய்துள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

Categories

Tech |