தினமும் சமையலில் பயன்படுத்தும் கறிவேப்பிலையில் என்னென்ன நன்மைகள் இருக்கிறது என்று இப்போது பார்க்கலாம்.
நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் ஒரு பொருளாக கறிவேப்பிலை பயன்படுகிறது. இது நாம் சமைக்கும் எல்லா உணவுப் பொருட்களிலும் சேர்க்கப்படுகிறது. ஆனால் நாம் தட்டில் உணவுகளை பரிமாறும்போது கருவேப்பிலையை மட்டும் சாப்பிடாமல் ஒதுக்கி வைத்து விடுவோம். இப்படி ஒதுக்கி வைக்கும் கருவேப்பிலையில் எவ்வளவு நன்மைகள் இருக்கிறது தெரியுமா?
நன்மைகள்:
1.இதில் போதுமான அளவு இரும்புச் சத்தும், போலிக் அமிலமும் அதிகளவில் இருப்பதால் எலும்புகளை வலுவடைய செய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
2.கருவேப்பிலை மலசிக்கல் பிரச்சினையும் சமாளிக்ககூடிய ஒரு மலமிளக்கியாக பயன்படுத்தப்படுகிறது.
3.கருவேப்பிலை சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு மற்றும் தோல் சம்மந்தமான நோய்க்கள் குணமாகின்றது.
4.கறிவேப்பிலை சாறு அல்லது பொடி ஏதாவது ஒன்றை உட்கொள்வதால் வயிற்றுப்போக்கு குணமாகும். மேலும் இது கண்ணிற்கு மிகவும் நல்லது.
5.கருவேப்பிலை சாற்றுடன் தேன் கலந்து ஜூஸ் ஆக பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் களைப்பு மற்றும் மயக்கம் தீரும்.
6.கருவேப்பிலையின் இலை, வேர், தண்டு மற்றும் பூக்களை தண்ணீரில் கொதிக்க வைத்து பருகினால் வயிற்றில் இருக்கும் அனைத்து விதமான தொந்தரவுகள் நீங்கும்.
7.கறிவேப்பிலையை வழக்கமாக சாப்பிட்டு வந்தால் உடலில் வேதிசிகிச்சையால் ஏற்படும் பக்க விளைவுகளைக் குறைத்துக் கொள்ளலாம். முடி வளர்ச்சியையும் அதிகப்படுத்த உதவுகிறது.
8.கருவேப்பிலை உட்கொள்வதால் புற்றுநோய் சிகிச்சையின் மூலம் ஏற்படும் விளைவுகளிலிருந்து இருந்து உடலை பாதுகாத்து கொள்ள முடியும்.
9.இதில் வைட்டமின்- ஈ இருப்பதால் நோய் தொற்றை தடுக்கிறது.