பீஸ்ட் படத்தின் ப்ரோமோ தற்போது வித்தியாசமான முறையில் வெளியாகியுள்ள நிலையில் அதனைச் சிம்பு கடந்த 2010 ஆம் ஆண்டே செய்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகின் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் சிலம்பரசன் காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். இதனையடுத்து இடையில் கொஞ்சம் சிக்கலில் இருந்த சிம்பு மாநாடு திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். இந்நிலையில் பீஸ்ட் திரைப்படத்தின் முதல் சிங்களுக்கான ப்ரோமோவை படக்குழுவினர்கள் வித்தியாசமான முறையில் வெளியிட்டுள்ளார்கள்.
இதனை கண்ட ரசிகர்கள் பீஸ்ட் குழுவினர்கள் வெளியிட்டுள்ள இந்த வித்யாசமான ப்ரோமோவை சிம்பு வானம் திரைப்படத்தின் மூலம் கடந்த 2010 ஆம் ஆண்டிலேயே வெளியிட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார்கள். இதனையடுத்து தனுஷ் நடித்த வானம் படத்தில் இடம்பெற்றுள்ள எவண்டி உன்ன பெத்தான் என்ற பாடல்தான் தமிழ் சினிமாவில் முதல் சிங்கிள் பாடல் என்ற கான்செப்ட்டில் வந்துள்ளதாகவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளார்கள்.