இலங்கையிலிருந்து வந்த 2 வாலிபர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அதிராம்பட்டினம் கடற்பகுதியில் இலங்கை பதிவு எண் கொண்ட படகு ஒன்று நின்றுள்ளது. இதனை பார்த்து சந்தேகம் அடைந்த அப்பகுதி மீனவர்கள் உடனடியாக கடலோர பாதுகாப்பு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் படகில் இருந்த 2 வாலிபர்களிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் இலங்கையை சேர்ந்த சுதாகர், ரோசன் என்பதும், படகு கரை தட்டி இந்த பகுதிக்கு வந்ததாகவும் கூறியுள்ளனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இவர்கள் எப்படி இங்கு வந்தார்கள்? இவர்களுக்கு வேறு யாருடனாவது தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.