Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“இத பார்த்தா சந்தேகமா இருக்கு” ஊழியர் அளித்த தகவல்…. கும்பலோடு தூக்கிய போலீஸ்….!!!!

கள்ள நோட்டு விற்பனை செய்ய முயன்ற 4  பேரை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள விளமல் பகுதியில் டாஸ்மார் கடை ஒன்று அமைந்துள்ளது. இந்த கடைக்கு வந்த அருள் என்பவர் மது பாட்டிலை வாங்கி விட்டு 500 ரூபாய் கள்ள நோட்டை கொடுத்துள்ளார். இதனை பார்த்து சந்தேகம் அடைந்த கடை ஊழியர்  உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அருளை பிடித்து விசாரணை செய்தனர்.

அந்த விசாரணையில் அவர் சிலருடன் சேர்ந்து கள்ள நோட்டை விற்பனை செய்ய முயன்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சட்டவிரோதமாக கள்ளநோட்டை  விற்பனை செய்ய முயன்ற அருள் மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்த கரிகாலன், ஈஸ்வரன், விஸ்வபாரதி ஆகியோரை  கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |