சட்டவிரோதமாக மண் அள்ளிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் உள்ள பனங்காட்டுகாடு பகுதியில் சட்டவிரோதமாக மண் அள்ளப்படுவதாக சுரங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி உதவி இயக்குனர் கிருஷ்ணமோகன் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் சோதனை செய்தனர். அந்த சோதனையில் சிலர் சட்டவிரோதமாக பொக்லைன் இயந்திரம் மூலம் மணல் அள்ளுவது தெரியவந்தது.
இதனையடுத்து காவல்துறையினர் மண் அள்ளி கொண்டிருந்த ராஜிவ் என்பவரை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் பொக்லைன் நில உரிமையாளர் உள்ளிட்ட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.