ராணிப்பேட்டையில் கூலித்தொழிலாளி மின் வேலியினுள் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாபு என்பவர் வசித்து வந்தார். இவர் ஆற்காட்டிலிருக்கும் செங்கல் சூளையில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் இவரும், அவரது நண்பர்களும் முயலை வேட்டையாடுவதற்காக விளாப்பாக்கம் பகுதிக்கு சென்றனர். அப்போது அப்பகுதியில் மச்சேந்திரன் என்பவர் வேர்க்கடலை தோட்டத்தை எலி மற்றும் பன்றி சேதப்படுத்தியதால் அவர் மின் வேலியை அமைத்தார்.
இதனை கவனிக்காத அவர் மின்வேலியினுள் சிக்கியதால் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நிலத்தின் உரிமையாளரான மச்சேந்திரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.