Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இத போடலன்னா 500 ரூபாய் அபராதம்…. ரயில்வே துறை அறிக்கை…. மதுரை மாவட்டம்….!!

மதுரையில் முகக் கவசம் அணியாத நபர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படவுள்ளது என்று மதுரையின் கோட்ட மேலாளர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் தற்போது மீண்டும் கொரோனா படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனால் அரசாங்கம் முகக்கவசம் அணியாத நபர்களுக்கு அபராதம் விதித்து வருகிறது. இந்த நிலையில் ரயில்வே துறையும் பயணிகள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறது.

இது குறித்து மதுரையின் கோட்ட மேலாளர் அலுவலகத்தின் செய்தி குறிப்பில் வெளியிட்டுள்ளதாவது, தற்போது நோய்த்தொற்றின் பரவல் அதிகமாகவுள்ளதால் அனைவரும் முகக் கவசம் அணிவது கட்டாயமாக உள்ளது. இதனால் மதுரையின் கோட்ட ரயில்வே துறைக்குட்பட்ட மதுரை, பழனி, தென்காசி உட்பட பல இடங்களிலுள்ள ரயில்வே நிலைய ஊழியர்களும், ரயில்வே பயணிகளும் கட்டாயமாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும், இல்லையென்றால் இந்திய ரயில்வே சட்டத்தின் அடிப்படையில் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படவுள்ளது என்று கூறினார்கள்.

Categories

Tech |