நெல்லையில் பேருந்திலிருக்கும் பயணிகளுக்கு போக்குவரத்து காவல்துறையினர் முகக் கவசம் வழங்கியுள்ளார்.
தமிழகத்தில் தற்போது மீண்டும் கொரோனா படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. அதே போல் நெல்லை மாவட்டத்திலும் நாளுக்குநாள் கொரோனா பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் பொருட்டு அரசாங்கம் பொதுமக்கள் முகக் கவசம் அணிவதை கட்டாயப்படுத்தியது. இதை அணியாத நபர்களுக்கு சுகாதாரத் துறையினர்களும் காவல் துறையினர்களும் அபராதம் விதித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பாளையங்கோட்டையிலிருக்கும் போக்குவரத்து காவல்துறையினர் அப்பகுதியில் முகக் கவசம் இன்றி செல்லும் நபர்களுக்கும், வாகனங்களில் செல்பவர்களுக்கும் கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்த பேருந்துக்குள் இருக்கும் பயணிகளில் முககவசம் அணியாத நபர்களுக்கு இலவசமாக அதனை வழங்கியுள்ளனர்.