மாசு மட்டுமின்றி, உணவுப்பழக்கமும் முகப்பருக்கள் வருவதற்காண முக்கிய காரணமாக அமைகிறது. காபியை அதிகமாக பருகி வருவதால், முகப்பருக்கள் வர வாய்ப்பு இருக்கிறது.
எனவே காபியை அதிகம் பருகும் பழக்கம் கொண்டவர்களுக்கு முகப்பரு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. காபியில் உள்ள, சில வேதிப் பொருட்கள், மன அழுத்தம் ஏற்படுத்தும் ஹார்மோன்களை தூண்டிவிடுகிறது. ஹார்மோன்கள், தேவையற்ற கலோரிகள் உடலில் சேர்வதற்கு வழிவகுப்பதோடு மற்றுமின்றி முகப்பருகள் தோன்றுவதற்கும் காரணமாக அமைகின்றன. பதப்படுத்தப்பட்ட மற்றும் இனிப்பு அதிகம் கொண்ட பொருட்களை தவிர்ப்பது மிக நல்லது. அதற்கு பதில் காய்கறிகள், பழங்களை உட்கொள்வது சரும ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது.
அதிகமான அளவு காபி பருகுவதும், போதுமான அளவு உணவு உட்கொள்ளாததும் நீரிழப்பிர்கு வழிவகுக்கும். அப்போது உடலில் உள்ள அமிலத்தின் அளவு அதிகமாகி நீரிழப்பு ஏற்படும். காபியை அதிகமாக உட்கொள்ளும்போது, அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் நீரில் கரையக்கூடிய தாதுக்கள் உடலில் இருந்து வெளியேறி விடும். அதன் விளைவாகத்தான் நீரிழப்பு ஏற்படுகிறது. எனவே அதிக காபி குடிக்கும் போது நிறைய சிறுநீர் வெளியேறி, உடலில் உள்ள நீர்சத்து குறைந்து அமில அளவு அதிகமாகும். ஆதலால் உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து குறைவது கூட முகப்பருவுக்கு காரணமாக அமைகிறது. இறுதியாக, முகப்பரு பாதிப்புக்கு தொடர்ந்து ஆளாகுபவர்கள், காபியை அதிகம் பருகுவதை தவிர்ப்பது மிகவும் நல்லது.