Categories
தேசிய செய்திகள்

“இந்தத் தோல்வியை பிரதமர் ஒப்புக்கொள்ள வேண்டும்”…. ஐதராபாத் எம்.பி. அதிரடி பேச்சு….!!

உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் சேர்ந்த தொழிலதிபர்  பியூஷ் ஜெயின் வீட்டில் ரூ.177 கோடிக்கு மேல் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணம் ஜிஎஸ்டி செலுத்தாமல் வாசனை பொருட்களை விற்றதன் மூலம் கிடைத்தது என்று வாக்குமூலம் அவர் அளித்துள்ளார் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற நடைபெற உள்ள நிலையில் ரொக்கமாக இவ்வளவு பெரிய தொகையை வட்டாரத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் பாஜக-சமாஜ்வாடி இடையே காரசார வாதம் நடைபெற்று வருகின்றது.

இதுகுறித்து ஐதராபாத் எம்.பி ஓவைசி கூறியது, பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட பிறகு இவ்வளவு பெரிய தொகை எப்படி உத்தரபிரதேச தொழிலதிபர் வீட்டில் கைப்பற்றப்பட்டது என்பது குறித்து பிரதமர் மோடி கண்டிப்பாக விளக்கம் அளிக்க வேண்டும். தனது சிந்தனையில் உதித்த இந்த திட்டம் முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டது என்பதை பிரதமர் மோடி ஒப்புக் கொள்ள வேண்டும். மேலும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை சிறு குறு தொழில்களையும், வேலைவாய்ப்புகளை பறித்து விட்டது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |