தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவர், தமிழக முதல்வராக பதவி ஏற்ற பின்னர் கொண்டாடும் முதல் பிறந்தநாள் என்பதால் தி.மு.க.வினர் மற்றும் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். மேலும் பலரும் முதல்வருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அப்போது தமிழக வளர்ச்சிக்காக தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்று மு.க.ஸ்டாலினிடம் பிரதமர் மோடி தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து, “தங்களின் ஒத்துழைப்புடன் தமிழகத்தின் வளர்ச்சிக்காக தொடர்ந்து நான் பாடுபடுவேன்” என்று பிரதமரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.