Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இந்தப் பகுதியில் மெக்கானிக் கடை உள்ளதா….? சுதாரிப்பதற்குள் வாலிபரின் தங்க சங்கிலி பறிப்பு… தீவிர விசாரணை போலீசார்….!!!!!!!!!

சென்னை அடுத்த  குரோம்பேட்டை பாத்திமா நகர் கிருஷ்ணா தெருவை சேர்ந்த அவினாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அடையாற்றில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் லிப்ட் ஆபரேட்டராக வேலை செய்து கொண்டிருக்கிறார். நேற்று முன்தினம் இரவு வேலை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிள் பல்லாவரம் துறைப்பாக்கம் ரேடியல் சாலையில் வந்து கொண்டிருந்தார். நன்மங்கலம் குரோம்பேட்டை இணைப்பு சாலை வழியாக வீட்டிற்கு திரும்பிய போது இரண்டு பேர் அவரை வழிமறித்து எங்கள் வண்டி பழுதாகிவிட்டது.

இந்த பகுதியில் மெக்கானிக்கடை இருக்கிறதா என கேட்டுள்ளனர். அப்போது திடீரென இரண்டு பேரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடியை தூவி உள்ளனர். இதனால் நிலை தடுமாறிய அவினாஷ் சுதாரிப்பதற்குள் அவர் கழுத்தில் இருந்து மூன்றரைப் பவுன் தங்கச் சங்கிலியை பறித்து விட்டு மர்ம  நபர்கள் இரண்டு பேரும் தப்பி சென்றுள்ளனர். இது பற்றி பள்ளிக்கரணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |