இயக்குனர் அணில் கட்ஸ் இயக்கி வரும் சபரி திரைப்படத்தில் வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இதில் கணேஷ், வெங்கட்ராமன், ஷாஷங்க், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கோபி சுந்தர் இசையமைக்கும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தியில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தை மகா மூவிஸ் பேனரில் மகேந்திரநாத் கொண்டலாத் தயாரிப்பில் மகரிஷி கொண்டலா வழங்குகின்றார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவாக நடைபெற்று படத்தின் முக்கிய கட்டத்தை சமீபத்தில் பட குழு முடித்து இருக்கிறது. இதன் முக்கிய காட்சிகள் இரண்டு வாரங்களாக கொடைக்கானலில் படமாக்கப்பட்டிருக்கிறது.
இந்த கொடைக்கானல் படப்பிடிப்பில் வரலட்சுமி மற்றும் படத்தில இடம் பெற்று இருக்கின்ற முக்கிய நடிகர்கள் நடித்திருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இந்த படம் பற்றி இயக்குனர் அணில் கட் கூறிய போது படம் சைக்காலஜிக்கல் திரில்லர் வகையில் பரபரப்பான திருப்பங்களை கொண்டது. இதில் நடிகை வரலட்சுமி சரத்குமார் பல கட்டங்களை உள்ளடக்கிய எமோஷனலான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதற்கு முன்னால் இது போன்ற வேடத்தில் அவர் நடித்ததில்லை மேலும் படத்தின் ஒவ்வொரு டிபார்ட்மெண்டும் சிறந்த வேலைகளை செய்து கொண்டிருக்கின்றார்கள். இந்த படம் நிச்சயம் பார்வையாளர்களுக்கு திரில்லிங்கான அனுபவத்தை தரும் என கூறியுள்ளார்.