ஆல்கஹால், போதைப் பொருள்கள், துப்பாக்கி கலாச்சாரம் போன்றவற்றை மிகைப்படுத்தி வானொலி நிலையங்கள் பாடல்கள் ஒலிபரப்பக்கூடாது என மத்திய அரசு எச்சரித்துள்ளது.
எப்எம், ரேடியோ சேனல்களுக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. இதுபற்றிய அறிவிப்பில், கிராண்ட் ஆஃப் பர்மிஷன் ஒப்பந்த நிபந்தனை படி செயல்பட வேண்டும். வன்முறை இடம்பெறும் எந்த விஷயத்தையும் வானொலியில் ஒலிபரப்பக் கூடாது.
மீறினால் அந்த வானொலி நிலையம் சட்டரீதியிலான நடவடிக்கையை சந்திக்க நேரிடும். எப்எம், ரேடியோ சேனல்களை ஒளிபரப்பதற்கான உரிமம் வழங்கப்பட்ட போது அதில் கொடுக்கப்பட்ட ஒப்பந்தத்தில் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளையும் அறிவுறுத்தல்களையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.