திருமணத்தின் போது மணமகள் மண்டபத்திற்குள் வருவதற்கு இந்த பாட்டு போட்டால் வருவேன் என்று அடம் பிடித்த சம்பவம் பெரும் வைரலாகி வருகிறது. திருமணங்களில் பல நேரங்களில் பல வித்தியாசமான சம்பவங்கள் நடைபெறுவது உண்டு. யாரும் எதிர்பாராத நேரத்தில் நடக்கும் சம்பவங்கள் மிகவும் வைரலாகி விடும். இந்நிலையில் வெட்டிங் பிரைட் என்றன்ஸ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை ஒருவர் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில் மணப்பெண் தனக்கு விரும்பிய பாடலை தான் திருமண மண்டபத்திற்குள் வரும்பொழுது போடவில்லை என்று கோபப்படுகிறார். அந்த பாடலை போட்டால் மட்டுமே நான் மண்டபத்திற்குள் வருவேன் என்று அடம் பிடிக்கிறார். இது வட இந்தியாவில் எடுக்கப்பட்ட வீடியோ. அவர் இந்தியில் பேசுகிறார். இப்படியாக மணப்பெண் தான் மண்டபத்திற்குள் வரும்பொழுது வித்தியாசமான பாடல் கேட்டு அடம் பிடித்த சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.