Categories
மாநில செய்திகள்

இந்திக்கு தாய்ப்பால்!… ஆனா மற்ற மொழிகளுக்கு கள்ளிப்பாலா?…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி ஸ்பீச்….!!!!

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இந்தி திணிப்புக்கு எதிராக தனி தீர்மானத்தை கொண்டு வந்தார். இந்நிலையில் இந்திக்கு எதிரான தனி தீர்மானத்தின் போது முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது “இந்தியா முழுவதும் இந்தியை வலுப்படுத்த மத்திய அரசு துடிப்பதாக கூறினார்.

அதுமட்டுமின்றி மத்திய அரசின் கல்வி நிலையங்களுக்கும், மற்ற மொழி மக்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தடுக்க நினைக்கிறார்கள். முழுக்கமுழுக்க இந்திக்காகவே துடிக்கிறது அவர்களது இதயம். இந்திக்கு தாய்ப்பாலும், இந்தியாவின் மற்ற மொழிகளுக்கு கள்ளிப்பாலும் புகட்ட நினைப்பது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது ஆகும்” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

Categories

Tech |