இந்திய வடக்கு எல்லையில் சீனா சுமார் 60000 வீரர்களை குவித்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தகவல் அளித்துள்ளார்.
குவாட் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கலந்துகொண்ட கூட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை டோக்கியோவில் நடைபெற்றது. கொரோனாவிற்கு பிறகு உலக தலைவர்கள் நேரடியாக கலந்து கொண்ட முதல் கூட்டம் இதுவாகும். பல்வேறு எல்லைகளில் சீன நாட்டின் அத்துமீறிய படைக்குவிப்பின் காரணமாக இக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பங்கேற்ற அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ செய்தியாளர்களை சந்தித்தபோது இந்தியாவின் வடக்கு எல்லையில் சீனா சுமார் 60 ஆயிரம் வீரர்களை குவித்துள்ளது என்று தெரிவித்தார்.மேலும் சீனாவின் இந்த நடவடிக்கை மிகவும் மோசமான நடவடிக்கை என்றும் அவர் விமர்சித்துள்ளார். இந்தியா சீனா ஆகிய இரு நாடுகளும் எல்லைப் பிரச்சனை தொடர்பாக சுமூக பேச்சுவார்த்தை நடத்தி முடித்ததையடுத்து திரும்பவும் இந்திய எல்லையில் சீனா படைகளை குவித்தது எல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.