இன்று தொடங்கிய இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் முதல் போட்டியில் மோஹன் பகான் அணி வெற்றி பெற்றுள்ளது
நாடு முழுவதும் கொரோனா பரவத் தொடங்கியதால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல தடைகள் விதிக்கப்பட்டது. இதனால் விளையாட்டு போட்டிகள் நடத்துவதற்கும் தடைவிதிக்கப்பட்டிருந்தது. தற்போது தொற்று குறைந்து வரும் சூழலில் இன்று முதல் கோவாவில் வைத்து ஏழாவது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் நடைபெற தொடங்கியுள்ளது.
இந்நிலையில் இன்று நடந்த முதல் போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் – ஏடிகே மோஹன் பகான் அணிகள் மோதின. விறுவிறுப்பாக சென்ற இந்த போட்டியின் 67-வது நிமிடத்தில் மோஹன் பகான் அணி வீரர் கிருஷ்ணா முதல் கோல் அடித்தார். கேரள அணியினர் பதில் கோல் எதுவும் அடிக்காத நிலையில் மோஹன் பகான் அணி 0 -1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.