திருவள்ளூர் மாவட்டத்தில் இந்தியன் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த இந்தியன் வங்கியில் நகைக்கடை ஆவணங்கள் பல வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நகைக்கடை ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது. இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டதில் ஆவணங்கள், லேப்டாப் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானது.
இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியன் வங்கியில் நகைக்கடன் ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.