Categories
சினிமா தமிழ் சினிமா

‘இந்தியன் 2 படப்பிடிப்பு தாமதமாவதற்கு காரணம் இதுதான்’… நடிகை காஜல் அகர்வால்…!!!

இந்தியன் 2 படப்பிடிப்பு தாமதமாவதற்கான காரணத்தை நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வந்த திரைப்படம் இந்தியன் 2 . இந்த படத்தின் படப்பிடிப்பின்போது திடீரென ஏற்பட்ட விபத்து காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா வைரஸ் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டது. தற்போது இயக்குனர் ஷங்கர் தெலுங்கில் நடிகர் ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். மேலும் கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனால்தான் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தாமதமாகிறது என்று செய்திகள் வெளியானது.

IFlicks: My next film is Indian 2, confirms Kajal Aggarwal || My next film  is Indian 2 confirms Kajal Aggarwal

இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் கதாநாயகி காஜல் அகர்வால் இந்த படத்தின் படப்பிடிப்பு தாமதமாவதற்கு உண்மையான காரணத்தை தெரிவித்துள்ளார். அதாவது அவர் ‘இந்தப்படத்தில் பெரும்பாலான தொழில்நுட்ப கலைஞர்கள் அமெரிக்காவில் இருந்து வரவேண்டிய நிலை இருக்கிறது. கோவிட் பிரச்சனை காரணமாக அவர்கள் இந்தியாவுக்கு வர முடியாத நிலையில் இருப்பதால் இந்த படப்பிடிப்பு நடைபெறவில்லை’ என்று கூறியுள்ளார்.

Categories

Tech |