இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்து வழக்கில் மத்திய குற்றப்பிரிவு துன்புறுத்துவதாக உயர்நீதிமன்றத்தில் கமல்ஹாசன் முறையீடு செய்துள்ளார்.
கடந்த மாதம் 19ம் தேதி இரவு இந்தியன் – 2 படப்பிடிப்பு திடீரென கிரேன் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது இதில் உதவி இயக்குனர் கிருஷ்ணா உட்பட 3 உயிழந்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
குறிப்பாக இந்த வழக்கில் புரொடக்ஷன் மேனேஜர் , லைகா நிறுவனம் , ஆபரேட்டர் , கிரேன் உரிமையாளர் என 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை துணை ஆணையர் நாகஜோதி தலைமையிலான அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்கள் அளித்த வாக்கு மூலத்தின் படி இயக்குனர் ஷங்கரிடம் விபத்து நிகழ்ந்தது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனிடம் சென்னை மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
இந்த நிலையில் இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்து வழக்கில் மத்திய குற்றப்பிரிவு துன்புறுத்துவதாக உயர்நீதிமன்றத்தில் கமல்ஹாசன் முறையீடு செய்துள்ளார். விபத்து நடந்தது எப்படி என நடித்துக்காட்டுமாறு துன்புறுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கை அவசர வழக்காக பிற்பகலில் விசாரிக்க நீதிபதி இளந்திரையன் ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து இந்த வழக்கு இன்று பிற்பகல் விசாரணைக்கு வர உள்ளது.