சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் இந்திய ரூபாய் மதிப்பு பொறுத்து மானியத்துடன் கூடிய எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இதனால் கச்சா எண்ணெய் விலை தினசரி மாற்றி அமைக்கும் அனுமதி அளிக்கப்பட்டதில் மாதந்தோறும் முதல் தேதியில் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன.
சென்னையில் மானியமில்லா சிலிண்டர் விலை எந்த மாற்றமுமின்றி ரூபாய் 650 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் விலையில் மாற்றம் செய்யவில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த விலை பிரதமர் அறிவித்த இலவச எரிவாயு சிலிண்டர் விநியோகத்திற்கும், மானிய விலை சிலிண்டருக்கும் பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமுடக்கம் தளர்த்தப்பட்டு வர்த்தகம் தொடங்கியுள்ள நிலையில் சிலிண்டர் விலை மாற்றமின்றி இருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.